close
Choose your channels

இந்த வாரம் விஷால் படம் உள்பட எத்தனை படங்கள்? ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!

Friday, May 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் படங்கள் உட்பட தென்னிந்திய படங்கள் குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் விஷால் நடித்த ’ரத்னம்’ உள்பட சில தமிழ் படங்களும் மற்ற மொழி படங்களும் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் கயல் ஆனந்தி, ஆர்கே சுரேஷ் உட்பட சிலர் நடித்த ’ஒயிட் ரோஸ்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீசான நிலையில் இந்த வாரம் இந்த படம் டென்ட்கொட்டா என்ற ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது

மேலும் ராஜேஷ் பாலச்சந்திரன், தேஜ் சரண்ராஜ், ஹரிதா நடிப்பில் உருவான ’வல்லவன் வகுத்ததடா’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த மூன்று தமிழ் படங்களை தவிர சில என்னென்ன தென்னிந்திய படங்கள் வெளியாகிறது என்பதை பார்ப்போம்.

சினிபஜார் ஓடிடியில் ’செளசெள பாத்’ என்ற கன்னட திரைப்படமும், ஆஹா ஓடிடியில் ’பிரசன்னா வதனம்’ என்ற தெலுங்கு படமும், ’ஆரம்பம்’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில், ’கலியுகம் பட்டனம்லோ’ என்ற தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ‘ஜெய்கணேஷ்’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் அமேசான் ப்ரைமில் ‘ஷகாஹரி’ என்ற கன்னட திரைப்படமும் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment