ஊரடங்கு தொடர்ந்த போதிலும் ரிலீஸில் உறுதியாக இருக்கும் விஷால் படம்!

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு தொடர்ந்த போதிலும் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது

விஷால் நடிப்பில் து.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’வீரமே வாகை சூடும்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு, திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 என படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். மேலும் இந்த போஸ்டரில் ஜனவரி 19ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு இருப்பினும் ரிலீஸ் தேதியில் வீரமே வாகை சூடும் திரைப்படம் உறுதியாக உள்ளது விஷால் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.