என்னை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி: விஷால் பட நடிகையின் திடுக் குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Saturday,September 24 2022]

விஷால் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தன்னை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்ததாக புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் அவ்வப்போது ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாவார் என்பது தெரிந்ததே.

மிஸ் இந்தியா அழகி பட்டத்தை இவர் வென்றபோது படுக்கையை பகிர்ந்து கொண்டு தான் அழகிப் பட்டத்தை வென்றார் என்று அவர் மீது பிரபல நடிகை ராக்கி சாவந்த் குற்றஞ்சாட்டினார்.

மேலும் நடிகை தனுஸ்ரீ முன்னணி நடிகரான நானா படேகர் மீது மீடூ புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தனுஸ்ரீ தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் பலமுறை தன்னுடைய காரில் பிரேக்கை செயலிழக்க வைத்து சதி செய்ததாகவும் கூறினார். மேலும் தனது வீட்டில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து தன்னை கொல்ல சதி நடந்ததாகவும் அவர் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.