தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் விஷால் சந்திப்பு!

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட நடிகர் விஷால் கொடுத்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் மீண்டும் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தனது வேட்புமனுவை நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் விஷால் இன்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சற்றுமுன்னர் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தனது வேட்புமனு முதலில் தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரிசை எண் 72 என்று கூறப்பட்டதாகவும், பின்னர் திடீரென நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அதிகாரி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதன் வீடியோ காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கும் என்றும், அந்த கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து தனது வேட்புமனுவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவர் நேரம் கொடுத்தவுடன் அவரையும் நேரில் சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவுள்ளதாக விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.