விஷாலின் 'மருது' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Wednesday,May 18 2016]

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ள 'மருது' திரைப்படம் நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.


சென்சாரில் யூ/ஏ சர்டிபிகேட் பெற்ற 'மருது' திரைப்படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் அதாவது 145 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சரியான அளவுள்ள படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் மே 20ஆம் தேதி எந்தவித போட்டியும் இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் திடீரென ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் 'மருது'வுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வசூல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

டி.இமான் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளதும் இந்த படத்திற்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.