விஷாலின் 'மதகஜராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 15 2016]

கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'மருது' திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான 'மதகஜராஜா' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்த படம் கடந்த சில ஆண்டுகளாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருந்தது. நடிகர் சங்கத்தின் செயலாளராக விஷால் பொறுப்பேற்றவுடன் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தீர்த்த விஷால், தற்போது ரிலீஸ் தேதியை ஏப்ரல் 29 என்று அறிவித்துள்ளார். விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.