விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் இணைந்த அதிசய நிகழ்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்று குற்றாலம். மூலிகை குணத்துடன் பேரிறைச்சலுடன் பொங்கி வரும் அருவியில் குளித்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருவது வழக்கமே.
இந்த நிலையில் கோலிவுட்டில் தயாராகி வரும் நான்கு படங்களில் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெறுகிறது. விஷால் நடிக்கும் இரும்புத்திரை', பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றும் தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் 'உலகம் விலைக்கு வருது' ஆகிய நான்கு படங்களின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரே நேரத்தில் நான்கு படங்களில் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெறுவதால் அருகில் உள்ள பெரிய நகரமான தென்காசியில் முக்கிய லாட்ஜ்கள் சில வாரங்களுக்கு புக் ஆகிவிட்டது. அதிலும் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் ஒரே லாட்ஜில் அருகருகே உள்ள அறையில் தங்கியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழா குறித்து இருவரும் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கோலிவுட் திரையுலகினர் குற்றாலத்திலும் தென்காசியிலும் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாகியுள்ளதாக அந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com