நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். முழுவிபரம்

  • IndiaGlitz, [Monday,November 28 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் ஒருசில சிறு சலசலப்புடன் நேற்று முடிவடைந்தது. கருணாஸ் கார் உடைப்பு, விஷால் அலுவலகம் தாக்குதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் பொதுக்குழு அமைதியாக முடிவடைந்தது. இந்நிலையில் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
1. பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அதுபற்றி பலமுறை கேட்டும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் செயற்குழுவால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.
2. சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது. மேலும் வயது வரம்பும் தளர்த்தப்படுகிறது.
3. சங்கத்தோடு எந்த தொடர்பும் இல்லாத 67 உறுப்பினர்களும் அவர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பாக பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கவேண்டும். அதன்பிறகும் அவர்கள் புதுப்பிக்க வில்லை என்றால் சங்கத்தை விட்டு நீக்கப்படுவர்.
4. சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சிஎம்டிஏ அனுமதி கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு கட்டிட பணி தொடங்கப்படும். 3 வருட காலத்திற்குள் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
5. சங்க அறக்கட்டளை விதிமுறைகளில் திருத்தம் செய்து தங்களை நிரந்தர அறங்காவலர்களாக நியமித்துக் கொண்ட முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அறக்கட்டளையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
6. சங்கத்தின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சங்க விதிகளுக்கு முரணாகவும், எதிராகவும் நடப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
7. தற்போது சங்கத்தில் 8.5 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. மேலும், கட்டடம் கட்ட நிதி திரட்ட திரைப்படம் தயாரிப்பாது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் சங்க உறுப்பினர்களின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது.,

More News

விஜய், விஷாலுடன் முதன்முதலில் மோதும் சந்தானம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' மற்றும் விஷால் நடித்த 'கத்திச்சண்டை' ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும்...

சட்டத்தின் வாயிலாக தீர்வு காண்போம். நிரந்தர நீக்கம் குறித்து சரத்குமார்

நேற்று சென்னையில் நடைபெற்ற 63வது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம். நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்த சில துளிகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்து அதன் பின்னர் மிரட்டல் காரணமாக தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்திலேயே நடந்தது. இந்த பொதுக்குழுவில் திரைப்பட நடிகர்கள்,

அமெரிக்கர்களை பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு அனுப்ப பெண்டகன் திட்டம்

உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருதி பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு இடம்பெற செய்யும் திட்டம் இருப்பதாக பென்டகன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையக அதிகாரி வின்ஸ்டன் பியவுசெப் கூறியுள்ளார்.

'வெண்ணிலா கபடிக்குழு 2' படத்தில் விஜய் சகோதரர்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு' மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.