சூப்பர் ஸ்டாரை அடுத்து உலக நாயகனிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

  • IndiaGlitz, [Monday,August 17 2015]

நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சரத்குமார், விஷால் ஆகிய இரு தரப்பினர்களும் மும்முரமாக வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் சற்று முன் விஷால் அணியினர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சந்தித்து தனது அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டதாக வந்த செய்தியினை பார்த்தோம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து விஷால் குழுவினர் உலக நாயகன் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.


தமிழ் திரையுலகின் இரண்டு பெரிய நடிகர்களையும் ஒரே நாளில் விஷால் அணியினர் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது விஷாலுடன் நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், குஷ்பு ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாயகனுக்கு மரியாதை நிமித்தமாக பூங்கொத்தை விஷால் அணியினர் கொடுத்து அவரது ஆதரவை தங்கள் அணிக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஷால் அணியினரின் இந்த நடவடிக்கை காரணமாக நடிகர் சங்க தேர்தல் பணிகள் விறுவிறுப்பாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் நேற்று கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்ட விஷால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும், அப்பாயின்மெண்ட் கிடைத்தவுடன் அவரை தேர்தலில் வாக்களிக்க வேண்டுகோள் விடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் மூத்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

'தலைவா' படத்துடன் கனெக்ஷன் ஆகும் 'புலி'

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் இன்னும் மூன்று நாட்களில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழுவதும்...

வேலாயுதம் படத்தின் இன்ஸ்பிரஷன்தான் 'தனி ஒருவன்'. ஜெயம் ராஜா

ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன் ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்த ரிலீஸ் செய்த ஜெயம் ரவி, தற்போது ஹாட்ரிக் வெற்றிப்படமாக ...

ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் 'கபாலி?

இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் மலேசியாவில் தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் முடிவடந்துள்ள நிலையில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் விரைவில் மலேசியாவுக்கு பயணம் செய்யவுள்ளனர். ....

போதைக்கு அடிமையானவரா ரஜினியின் மகள்?

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித், அடுத்து இயக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

ஜீத்துஜோசப்பின் அடுத்த படத்தில் அருள்நிதி?

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துசோசப் இயக்கிய மலையாள திரைப்படம் 'த்ரிஷ்யம்' அவரது இயக்கத்திலேயே தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. ....