பாஜகவில் சேரப்போகிறாரா விஷால்? எல்.முருகனை சந்திக்கவிருப்பதாக தகவல்!

  • IndiaGlitz, [Sunday,September 13 2020]

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் பலர் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் சமீபகாலமாக முன்னணி ஹீரோ ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக செய்திகள் கசிந்து கொண்டு வந்தது. முதலில் சிவகார்த்திகேயன் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி வந்த நிலையில் அவரது தரப்பினர் இதற்கு மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால் பாஜகவில் சேர இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை விஷால் சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும் இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது பாஜகவில் விஷால் சேருவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவின் பின்னணியில் இருந்து கொண்டு தான் மகாராஷ்டிரா அரசை எதிர்ப்பதாக கூறப்பட்ட நிலையில் கங்கனாவை சமீபத்தில் பகத்சிங்கின் ஒப்பிட்டு விஷால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. பாஜகவில் விஷால் சேரவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.