12வது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபலம் ஒருவர் 12வது முறையாக இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .
விஷால் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’லத்தி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
’லத்தி’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் 12வது முறையாக அவருடன் இணைவதில் பெருமை கொள்வதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஷால் நடித்த சண்டக்கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், தாமரபரணி, அவன் இவன், சண்டக்கோழி 2, ‘வீரமே வாகை சூடும்’ உள்பட விஷாலின் 11 திரைப்படங்களுக்கு இசையமைத்த யுவன்சங்கர் ராஜா தற்போது 12வது முறையாக விஷாலின் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Elated to have our lovely combo back for the #12th time in my career.
— Vishal (@VishalKOfficial) April 4, 2022
Welcoming our little maestro n my good friend @thisisysr on-board for #Laththi. pic.twitter.com/OFfcUaU2LW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com