12வது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!

விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபலம் ஒருவர் 12வது முறையாக இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

விஷால் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’லத்தி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

’லத்தி’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் 12வது முறையாக அவருடன் இணைவதில் பெருமை கொள்வதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஷால் நடித்த சண்டக்கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், தாமரபரணி, அவன் இவன், சண்டக்கோழி 2, ‘வீரமே வாகை சூடும்’ உள்பட விஷாலின் 11 திரைப்படங்களுக்கு இசையமைத்த யுவன்சங்கர் ராஜா தற்போது 12வது முறையாக விஷாலின் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஆர்.ஆர்.ஆர்' வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது நாடு முழுவதும்

பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகைகளின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளிவரும் தகவல்களை அவ்வப்போது

போதைப்பொருட்களுடன் உல்லாச பார்ட்டி: பிரபல நடிகரின் மகள் கைதா?

போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தியதாக பிரபல நடிகரின் மகள், காவல்துறை அதிகாரியின் மகள், எம்பியின் மகன் உள்பட ஒரு சில முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம்

ஷூட்டிங் முடிஞ்சுருச்சுங்கிற தைரியமா? நெல்சனை மிரட்டிய விஜய்யின் சன் டிவி பேட்டி!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

சன்டே அண்ட் சன்ஸ்: மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! 

இன்று ஞாயிறு தினத்தில் மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.