ராதிகா-சிம்பு செய்த உதவிக்கு நன்றி கூறிய விஷால்

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் சரத்குமார் அணியை சேர்ந்தவர்கள் விஷாலை குறிவைத்தே பெரும்பாலும் விமர்சனம் செய்கின்றனர். நடிகை ராதிகா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது 'விஷால் ரெட்டி' என்று அழுத்தமாக குறிப்பிட்டதை அனைவரும் அறிவர். மேலும் அவரை தொடர்ந்து பேசிய சிம்பு, விஷாலை ஒருமையிலும் நரி போன்று சூழ்ச்சி செய்தவர் என்றும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் கூறியுள்ள விஷால், 'எனக்கு ராதிகா மேடம் மேல தனிப்பட்ட கோபம் இல்லை. என்னை விஷால் ரெட்டி' என்று ராதிகா சொல்லி இருக்கார். நல்லது செய்யறதுக்கு சாதி, மதம் என்று எந்த அடையாளமும் தேவை இல்லை. நடிகர் சங்கத்தில் சாதி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய விஷால், என்னை ஒருமையில் பேசிய அந்த தம்பி சிம்பு மீதும் எனக்கு கோபம் இல்லை. சிம்புவின் இந்த பேச்சுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். சிம்புவின் இந்த பேச்சுக்கு பின்னர்தான் பாண்டவர் அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

சாதாரணமா வெற்றி பெற இருந்த எங்கள் அணியை மாபெரும் வெற்றி பெற உதவி செய்த ராதிகா மேடம் மற்றும் தம்பி சிம்புவுக்கு எனது நன்றி என்று விஷால் கூறியுள்ளார்.

More News

நடிகர் சங்க தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன்...

விஷால் மீது சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை

நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு ஆதரவு தேடி வருகின்றனர்...

விக்ரமின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் வரும் 21ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.....

விஷாலுக்கு வில்லனாகும் பிரபல விநியோகிஸ்தர்?

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் பிசியாக இருக்கும் விஷால், தேர்தல் முடிந்தவுடன் 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'மருது' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது....

ராகவா லாரன்ஸ் மாணவர்களை கவர்ந்த 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது....