எனக்கே இந்த கதி என்றால்...விஷால் ஆவேச பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சங்கத்திற்கு சீல் வைத்த வட்டாட்சியர், இரு தரப்பினர்களும் சமாதானமாக வந்தால் மட்டுமே அலுவலகம் திறக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று கைதான விஷால், விடுதலைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்கு காவல்துறை மீதும் நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை உள்ளது. எனக்கு நீதி கிடைக்கும் என உறுதிபட நம்புகிறேன். இளையராஜா அவர்களை கெளரவப்படுத்தும் விழாவை நடத்தவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத ஒருசிலர் எங்களுக்கு இடைஞ்சல் தருகின்றனர். இதனை நாங்கள் சட்டப்படி அணுகுவோம். இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி அதில் வரும் வருமானத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவோம்
ரூ.7 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர். சங்கத்தின் உறுப்பினர்கள் முறைப்படி கணக்கு கேட்டால், பொருளாளர் அவர்களுக்கு கணக்கை காண்பிக்க தயாராக உள்ளார்.
ஜே.கே.ரித்தீஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. அவர் ஒரு குற்றவாளி. அவர் மீது நாங்கள் கொடுத்த புகாருக்கு காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் குற்றமே செய்யாத எங்கள் மீது செக்சன் 145 பிரிவின்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். எனக்கே இந்த கதி என்றால்...இதைப்பற்றி மேலும் விரிவாக பேச விரும்பைல்லை
நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. அனைத்திற்கும் கணக்கு உள்ளது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதுதான் முறைகேடு என்றால் அந்த முறைகேட்டை நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். நல்லது செய்யும்போது இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும், அதனை சமாளித்து எதிர்கொள்வோம்' என்று விஷால் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தல் வரும்போது அந்த தேர்தலில் நிற்கக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராததால் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பதில் கிடைத்திருந்தால் நான் வெறும் நடிகனாக மட்டுமே இருந்திருப்பேன் என்று விஷால் மேலும் கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout