திரைத்துறை பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்ல முடிவு: விஷால் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

திரைத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், திரைத்துறையை சீரமைக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்ததாகவும், ஆனால் இன்னும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு சென்று தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

அனைத்து துறையில் உள்ள பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டிய கடமை ஒரு அரசுக்கு இருப்பதாகவும், அந்த வகையில் திரைத்துறையின் இந்த பிரச்சனையையும் அரசு தீர்த்து வைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்த விஷால், இதுகுறித்து விரைவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை  தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விஷால் கூறியுள்ளார். இந்த பிரச்சனையை அரசு எப்படி அணுகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

தெலுங்கில் அறிமுகமாகும் கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்

மெலடி பாடல்களை ரசிப்பதற்கு என்றே எந்த காலத்திலும் ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. எந்த காலத்திற்கும் உரிய வகையில் மெலடி பாடல்களை இசையமைப்பதில் ஒருசில இசையமைப்பாளர்களே புகழ் பெற்றுள்ள

வாய்ப்புகாக படுக்கை விஷயத்தில் பொய் சொன்னாரா ரகுல்? உண்மையை உடைக்கும் பிரபல நடிகை

ரகுல் ப்ரித்திசிங் சமீபத்தில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கூறியபோது, 'மற்ற இடங்களில் எப்படியோ, தெலுங்கு திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இல்லை

சுசிலீக்ஸ் போல் ஸ்ரீலீக்ஸ்: பிரபல நடிகர்கள் கலக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூகவலைத்தள பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில் இடமில்லை: வேற மாநிலத்திற்கு போங்க: கமல், ரஜினியை தாக்கிய முதல்வர்

கோலிவுட் திரையுலகில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர்களின் அரசியல் வருகை அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் நீங்கள் அழவேண்டும் என்று விரும்பியது: அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.