திரைத்துறை பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்ல முடிவு: விஷால் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், திரைத்துறையை சீரமைக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்ததாகவும், ஆனால் இன்னும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு சென்று தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறையில் உள்ள பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டிய கடமை ஒரு அரசுக்கு இருப்பதாகவும், அந்த வகையில் திரைத்துறையின் இந்த பிரச்சனையையும் அரசு தீர்த்து வைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்த விஷால், இதுகுறித்து விரைவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் விஷால் கூறியுள்ளார். இந்த பிரச்சனையை அரசு எப்படி அணுகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com