'லத்தி' படப்பிடிப்பின்போது விஷாலுக்கு காயம்: அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘லத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

விஷாலின் 32வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை அவருடைய நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா, ரமணா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். மேலும் வினோத்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்தபோது தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் சின்ன சின்ன எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்த சிகிச்சைக்காகத் தான் கேரளா செல்ல இருப்பதாகவும் விரைவில் படக்குழுவுடன் இணைய இருப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் காயம் ஏற்பட்ட போது எடுத்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவை அதிர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

விஷால் ஜோடியாக சுனைனா நடித்து வரும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஷால் மீண்டும் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்தியின் 'சர்தார்' பிசினஸ் ஆரம்பம்: முக்கிய தகவல்

நடிகர் கார்த்தி நடித்துவரும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ராஷிகண்ணா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு

வைரலாகும் பழைய தமிழ் யூனியன்: யார் யாரெல்லாம் வந்து இருக்காங்க பாருங்க!

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவ்வப்போது ஒன்று கூடி தங்களுடைய மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

ஜிவி பிரகாஷ் படத்திற்காக தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பாடல் வைரல்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்காக தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பாடலொன்று சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ரன்பீருடன் திருமணம் முடிந்துவிட்டதே… ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த ஆலியா பட்!

பாலிவுட்டின் நட்சத்திர நடிகர், நடிகையான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா இருவரும் காதல் ஜோடிகளாக வலம்வரும் தகவல்

13 வருடம் கழித்து குடும்பத்துடன் டூர் சென்ற நடிகை பூஜா ஹெக்டே… எங்கு தெரியுமா?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும்