விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Tuesday,November 23 2021]

விஷால் நடிப்பில் உருவான ’எனிமி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படமான ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடிப்பில் து.பா,சரவணன் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வீரமே வாகை சூடும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பொங்கல் தினத்தில் அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வெளியாவதால் இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


More News

தனுஷின் அடுத்த படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ்: அதிரடி அறிவிப்பு

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி முடித்துள்ள 'மாறன்' மற்றும் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படத்தில்

பிரியங்காவிடம் இருந்து தனது வேலையை தொடங்கும் அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் என்பது தெரிந்தது. ஆனால் அபிஷேக் ரீஎண்ட்ரி ஆனதில் இருந்து எந்தவித புரமோவிலும்

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரியாகும் 'வாம்மா மின்னல்' நடிகை!

சரத்குமார் நடித்த 'மாயி' என்ற திரைப்படம் கடந்த 2000ம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் வடிவேலு பெண் பார்க்க வரும் காட்சியில் 'வாம்மா மின்னல்' என்று கூறும் போது மின்னல் வேகத்தில்

நீண்டநாள் கனவு நனவாகிவிட்டது: பூஜா ஹெக்டேவின் சந்தோஷமான பதிவு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையும், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கனவு நனவாகி விட்டதாக பதிவு செய்துள்ளார்.

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர் இவர்கள் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே