விஷாலின் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது

இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு இந்த படத்தின் மீதி உள்ள காட்சிகளை தானே இயக்கப் போவதாக விஷால் அறிவித்திருந்த போதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அதன் பிறகு நடைபெறவில்லை.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் முழு வீச்சில் ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பில் விஷால் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரூ.2 லட்சம் மட்டுமல்ல.. மீண்டும் லட்சக்கணக்கில் உதவி செய்த பாலா.. குவியும் பாராட்டுக்கள்..!

விஜய் டிவி பிரபலம் பாலா சமீபத்தில் தனது அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாயை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

2வது படம் முடியும் முன்பே 3வது படம்.. தனுஷ் பட பூஜை நடந்தது எங்கே தெரியுமா?

 நடிகர் தனுஷ் கடந்த 2017ஆம் ஆண்டு 'பா பாண்டி' என்ற படத்தை இயக்கிய நிலையில் அவர் தற்போது ' D50' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

மக்கள் எதுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்கணும்.. வெறுப்பில் பேசிய கமல்ஹாசன்..!

இந்த சீசனில் சுவராசியம் எதுவும் இல்லாததால் எதற்காக மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் வெறுப்பில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார்.. நடிகர் ஜெயராம் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..!

 நடிகர் ஜெயராம் தனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார் என்று கூறி பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

உப்புமாவையே சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கலாமே.. அர்ச்சனாவையும் அர்ச்சனை செய்த கமல்..!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் மற்றும் விஷ்ணு சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா திடீரென அந்த சண்டையில்