close
Choose your channels

இது ஆடுபுலி ஆட்டம் இல்ல! சண்டக்கோழி 2 டிரைலர் விமர்சனம்

Friday, May 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இது ஆடுபுலி ஆட்டம் இல்ல! சண்டக்கோழி 2 டிரைலர் விமர்சனம்

விஷால், மீரா ஜாஸ்மின் நடித்த 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி விஷால் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இருந்து தொடங்கும் டிரைலர் அதே கிராமிய மணத்துடன் கோவில், திருவிழா, ராஜ்கிரணுக்கு வரும் சாமி போன்ற காட்சிகளால் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது

இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல, தடுக்கத்தான் ஆரம்பித்துள்ளேன் என்ற வசனத்துடன் ஆக்சன் ஹீரோவாக விஷாலும், திருவிழாவில் விசில் அடிக்கும் பெண்ணாக கீர்த்தி சுரேஷும் டிரைலரில் அறிமுகமாகின்றனர். அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் கீர்த்தி சுரேஷின் கிராமத்து ஆட்டத்தை பார்க்கும்போது இந்த படம் ஒரு பக்கா கமர்சியல் படம் என்பது புரிகிறது.

மேலும் வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது அவரது கெட்டப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இது ஆடும்புலி ஆட்டம் இல்ல, ஆடும் புலியும் சேர்ந்து ஆடும் ஆட்டம் என்ற ராஜ்கிரணின் வசனத்துடன் முடியும் இந்த படத்தின் டிரைலர் நிச்சயம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆட்டம் போட வைக்கும் என்பது நிச்சயம். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment