பூஜையுடன் தொடங்கியது விஷாலின் 'சண்டக்கோழி 2'

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருவதால் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உற்சாகத்துடன் இருக்கின்றார் விஷால். இந்த நிலையில் அதே உற்சாகத்துடன் இன்று அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'சண்டக்கோழி 2' படத்தின் பூஜை நடந்தது

இயக்குனர் லிங்குசாமி, விஷால், ராஜ்கிரண் உள்பட பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். இன்றே இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஏற்கனவே பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.