ஆர்.கே.நகரில் விஷால்: பிரபலங்களின் கருத்து கருத்து என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த அதிரடி அரசியல் முடிவு குறித்து பிரபலங்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்ப்போம்:
இயக்குனர் சுந்தர் சி: அரசியலுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது
நாஞ்சில் சம்பத்: விஷால் அரசியலுக்கு வர வேண்டும் என ஏற்கனவே டிடிவி தினகரன் அழைத்திருந்தார்
இயக்குனர் அமீர்: சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன?
நடிகர் மோகன் ராமன்: மாற்றம் என்பது புத்துணர்ச்சியான மூச்சுக்காற்றில் இருந்துதான் வர வேண்டும். முன்வைத்த காலை பின்வைக்க வேண்டாம். என்னை போன்ற சீனியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு
சுமந்த் ராமன் (அரசியல் விமர்சகர்): சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்யும் நடிகர்கள் மத்தியில், விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது
பத்திரிகையாளர் ஷ்யாம்: ஆர்.கே.நகரில் விஷால் வெற்றி பெற மிகவும் பாடுபட வேண்டும் விஷாலுக்கு வெற்றி கிடைத்தால் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments