விஷாலின் 'ரத்னம்' படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? இத்தனை திரையரங்குகளில் ரிலீஸா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு அடுத்து இந்த படமும் விஷாலுக்கு 100 கோடி ரூபாய் வசூல் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் இந்த படம் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘ரத்னம்’ திரைப்படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் முந்தைய படமான ’மார்க் ஆண்டனி’ திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ரன்னிங் டைம் தான் என்றும் அந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என்ற நிலையில் அதைவிட இந்த படம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘ரத்னம்’ திரைப்படம் தமிழகத்தில் 500 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசாக இருப்பதாகவும் வேறு படங்கள் போட்டியில்லை என்பதால் சோலோவாக இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பது கூடுதல் பாசிட்டிவ் அம்சம் ஆகும். அதேபோல் தமிழகம் உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரிலீசாகும் திரையரங்குகளில் எண்ணிக்கை 1000 என்றும் கூறப்படுவதால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி, கௌதம் மேனன், யோகி பாபு, விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Rathnam in theatres from tomorrow, book your tickets now 🔥
— IndiaGlitz - Tamil (@igtamil) April 25, 2024
Starring Puratchi Thalapathy @actorvishalofficial.
A @ThisisDSP musical.
A film by #Hari, in theatres from tomorrow.
@priyabhavanishankar @stonebenchers @invenio_origin @ZeeStudiosSouth @mynaasukumarm #TSJay… pic.twitter.com/H36ApmSUbB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout