விஷாலின்  'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

விஷால் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 'மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் நடந்த விபத்து முடிந்த 10 நாட்களில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது படக்ழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தனியார் பிலிம் சிட்டி ஒன்றில் விஷாலின் 'மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று லைட்ஸ்மேன் தலையில் லைட் கம்பம் விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்து நாள் இடைவெளியில் 'மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் அடுத்தடுத்து விபத்து நடந்து வருவது படக்குழுவினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், டிஎஸ்ஜி, ரிதுவர்மா, உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

More News

'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை வெளியிட மாட்டோம்: நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்

'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

03.03.2023 அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ்: சிம்பு பட தயாரிப்பாளர் அறிவிப்பு..!

சிம்பு நடித்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் வரும் மார்ச் மூன்றாம் தேதி அன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.

சீரியலுக்கு வரும் விஜய் தந்தை.. ராதிகா தான் ஜோடியா? டைட்டில் அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி.. மணிமேகலை விலகியதற்கு காரணம் இதுதானா?

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை சமீபத்தில் விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருடைய விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக  ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவி

பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. விக்னேஷ் சிவனின் தத்துவங்கள்..

 இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சில தத்துவங்களை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.