விஷாலின் 'மார்க் ஆண்டனி' ஓடிடி ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மார்க் ஆண்டனி’ திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அதாவது வரும் வெள்ளி அன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறிய ரசிகர்கள் அமேசான் ஓடிடியில் இந்த படத்தை பார்த்து மகிழலாம்.
a laughter fest taking you beyond the dimensions of time! 🕰️#MarkAntonyOnPrime, Oct 13 pic.twitter.com/GmGjSfoku9
— prime video IN (@PrimeVideoIN) October 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com