விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் வெளியான இந்த டைட்டில் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ’எனிமி’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை தயாரித்த வினோத்குமார் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என சற்று முன்னர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இசை அசுரன் ஜிவி பிரகாஷ் அவர்கள் இந்த படத்தில் இணைந்ததை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Very happy to Welcome the Isai asuran on board,the most wanted musical gangster @gvprakash sir for for @VishalKOfficial's #MarkAntony?????? super happy to work with you again sir?? #V33 @iam_SJSuryah @vinod_offl @RIAZtheboss @UrsVamsiShekar @baraju_SuperHit pic.twitter.com/BQhev46wKP
— Adhik Ravichandran (@Adhikravi) January 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com