விஷாலின் 'மார்க் ஆண்டனி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறாது.

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் தகவல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 150 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா போட்டி போட்டு நடித்திருந்தது ட்ரைலரில் பார்க்க நேர்ந்த நிலையில் முழு படத்தையும் பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.
 

More News

மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர்  சந்திரசேகர் திடீர் கைது.. என்ன காரணம்..!

நடிகை பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் திடீரென நேற்று கைது செய்யப்பட்டு இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சீரியலுக்காக பேசிய வசனம் உண்மையான சோகம்.. ஜி மாரிமுத்துவின் வீடியோ வைரல்..!

பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக பேசிய வசனத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டப்பிங் பேசும் போது மாரடைப்பு.. தானே காரை ஓட்டி மருத்துவமனைக்கு சென்ற ஜி மாரிமுத்து..!

பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.  

'எதிர்நீச்சல்' நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் 'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய கேரக்டரில்   நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை

WWE வீரர்களுடன் நடித்த கார்த்தி.. எந்த படத்திற்காக தெரியுமா?

நடிகர் கார்த்திக் நடித்த 'ஜப்பான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர்  நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.