பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஷால் படம்.. மகிழ்ச்சியுடன் அறிவித்த சந்தானம்..!

  • IndiaGlitz, [Friday,January 03 2025]

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் ஏற்கனவே 9 படங்கள் இருக்கும் நிலையில், தற்போது பத்தாவது படமாக விஷால் நடித்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் திடீரென அந்த படம் பின்வாங்கியது. இதையடுத்து, பல திரைப்படங்கள் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் முக்கியமானவை ’கேம் சேஞ்சர்’, ’வணங்கான்’, ’காதலிக்க நேரமில்லை’, ’மெட்ராஸ் காரன்’ உள்ளிட்ட சில படங்கள் ஆகும்.

இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மதகஜராஜா’ என்ற திரைப்படம் 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. தற்போது, அந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று நடிகர் சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இம்முறை இந்த படம் பொங்கல் தினத்தில் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

விஷால் ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இத்திரைப்படத்தில் சந்தானம், நிதின் சத்யா, சடகோபன், ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்த படம், விஷாலுக்கு இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பெண்களின் பாதுகாப்பு: தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..!

பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என இன்று வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு

பைரவர் வழிபாடு: 2025ல் செவ்வாயின் தாக்கத்தை சமாளிக்க சிறந்த வழி

பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள், 2025 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகம் கடக ராசியில் நீச்சமாக இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக பைரவர் வழிபாட்டை பரிந்துரைத்துள்ளார்.

ஷங்கரின் பிரமாண்டம்.. ராம் சரணின் மாஸ் ஆக்சன்.. 'கேம் சேஞ்சர்' டிரைலர் ரிலீஸ்..!

ஷங்கரின் பிரம்மாண்டம் மற்றும் ராம்சரண் தேஜாவின் அதிரடி ஆக்சன் நடிப்பில் உருவாகிய 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 8 படங்கள் ரிலீஸ்.. பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் பின்வாங்கியதை அடுத்து பொங்கல் தினத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியானது.

2025 புத்தாண்டு ராசி பலன்: ஜோதிடர் ஷெல்வி அவர்களின் துல்லியமான கணிப்பு !

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் 2025 ஆம் ஆண்டுக்கான 12 ராசிகளுக்கான விரிவான ராசி பலனை பகிர்ந்துள்ளார்.