விஷாலின் 'லத்தி' அட்டகாசமான டீசர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Tuesday,July 19 2022]

நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’லத்தி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியான நிலையில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டீசரில் விஷால் போலீஸ் கேரக்டரில் நடித்து இருக்கும் ஆக்ரோஷமான காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த டீசரை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

விஷால், சுனைனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வினோத் குமார் இயக்கியுள்ளார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.