விஷாலின் 'லத்தி' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் உருவாகிய இந்த படத்தை வினோத் குமார் இயக்கி உள்ளார் என்பதும் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து உள்ளார் என்பதும் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘லத்தி’ திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்த படம் விஷாலின் வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Here we go, the much awaited #LaththiTrailer release date is here,
— Vishal (@VishalKOfficial) December 9, 2022
It’s 12/12/22 @ 5 PM, GB#LaththiCharge #Laththi #Laatti pic.twitter.com/3qLt5YPaIu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com