விஷாலின் 'லத்தி' சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

  • IndiaGlitz, [Friday,December 16 2022]

விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘லத்தி’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரானா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 142 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 22 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வினோத் குமார் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரானா, நந்தா தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.