'தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்': விஷாலின் 'லத்தி' சிங்கிள் பாடல் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘லத்தி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ’தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்’ என்ற இந்த பாடலின் வீடியோவில் விஷாலின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பாடலை துரை என்பவர் எழுதியுள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா, நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். தமிழ் உள்பட 4 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளின் போது விஷால் டூப் இன்றி நடித்ததால் அவருக்கு இரண்டு முறை காயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#ThottaLoadAageWaiting - The Fiery Single form #Laatti
— Vishal (@VishalKOfficial) October 5, 2022
First Single OUT NOW ??????
▶️ https://t.co/S9gseg8mYb
A @thisisysr Musical#Laththi #Laatti #LaththiCharge
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com