விக்ரம், சமந்தாவுடன் மோத முடிவு செய்த விஷால்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விக்ரம் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர்களின் படங்கள் ரிலீசாகும் தினத்தில் தனது படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடிப்பில் உருவான ’லத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12 என சற்றுமுன் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படமும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சமந்தா நடித்த நான்கு மொழி திரைப்படமான ’யசோதா’ திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இதனையடுத்து விக்ரம் மற்றும் சமந்தாவுடன் மோத விஷால் தயாராகிவிட்டார்.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் ’லத்தி’ படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Get ready to witness #Laththi in theatres worldwide from #August12th 2022.
— Vishal (@VishalKOfficial) May 22, 2022
Stay tuned for my Chapter Of #Enmity. #LaththiCharge #LaththiFromAug12@_RanaProduction @dir_vinothkumar @actorramanaa @nandaa_actor @balasubramaniem @PeterHeinOffl @thisisysr @DOP_bala @TheSunainaa pic.twitter.com/8pefRPBNRK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com