அறிமுக காட்சியே அதிரடி ஆக்சன் தான்: விஷால் வெளியிட்ட வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடித்து வரும் அடுத்த படத்தின் அறிமுக காட்சியே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என விஷால் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷால் நடிப்பில் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘லத்தி’ படத்தின் காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் விளக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘லத்தி’ படத்தின் அறிமுக ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Intense Fight Scene Discussion with Master @PeterHeinOffl for #Laththi intro #FightSequence. pic.twitter.com/goUDoaFhuk
— Vishal (@VishalKOfficial) July 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments