'லத்தி' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட விஷால்: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
விஷால் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லத்தி’ திரைப்படத்தை அவருடைய நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்தா தயாரித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பீட்டர் ஹெய்ன் பணி புரிந்துள்ளார். இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பின்போது விஷாலுக்கு இரண்டு முறை காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘லத்தி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என்ற மாஸ் அப்டேட்டை அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Get ready - #ThottaLoadAageWaiting - The first single from #Laththi is locked and loaded
— Vishal (@VishalKOfficial) October 1, 2022
Releasing on October 5th #Laththi #Laatti #LaththiChargehttps://t.co/SMYbNb1kQS@RanaProduction0 @nandaa_actor @thisisysr @U1Records @balasubramaniem @dir_vinothkumar @TheSunainaa pic.twitter.com/fH0Xf2tMLO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments