மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் தான் இரும்புத்திரை: விஷால்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்தவிழாவில் விஷால் , விஷாலின் தாயார் லட்சுமி தேவி , தந்தை ஜி.கே. ரெட்டி , இயக்குநர் மித்ரன் , இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா , நடிகை குட்டி பத்மினி , இயக்குநர் லிங்குசாமி , கில்ட் ஜாகுவார் தங்கம் , தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் , நடிகர் ராஜ் கிரண் , தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் , FEFSI R.k. செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஷால் பேசியதாவது:- சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.  யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன்.  இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம். அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன்.  மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான். இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி!

இவ்வாறு நடிகர் விஷால் பேசினார்.

More News

ஆண்டாளின் புகழ்பாட ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம்

ஆண்டாள் குறித்த பெரும் சர்ச்சைக்கு நேற்று சென்னை ஐகோர்ட் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி வருடத்திற்கு ஒருமுறை பஸ் கட்டணம் உயரும்: அமைச்சரின் அதிர்ச்சி அறிவிப்பு

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே பேருந்தில் செல்கின்றனர் என்பதால் அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு கடுமையான பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி.

பிரபல நகைச்சுவை நடிகர் கார் மோதி வாலிபர் பரிதாப மரணம்

வந்தவாசி அருகே பிரபல நகைச்சுவை நடிகர் ஜெகன் மோதிய கார் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

கமல்ஹாசனின் புதிய படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் ஒருபக்கம் அரசியல் களத்தில் குதிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார்.

தரம் தாழ்ந்த விமர்சனம்: தொலைக்காட்சி அலுவலகம் முன் சூர்யா ரசிகர்கள் போராட்டம்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு விஜேக்கள் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலடித்து பேசிய விவகாரம் சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்தி அடைய செய்தது