close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் தயாரிப்பாளர், விஷால் இயக்குனர்

Saturday, October 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்து முடித்துள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் இவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் 'நிமிர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. உதயநிதியின் அடுத்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் தற்போது விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு மீதமிருப்பதாகவும், இந்த படத்தின் பணிகள் முடிந்தபின்னர் அவர் உதயநிதி படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' நாயகி ஷாரதாஸ்ரீநாத் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

'7 கிணறுகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை விஜய்யின் 'மெர்சல்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே உதயநிதி நடித்த 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment