விஷாலின் 'இரும்புத்திரை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் இரும்புத்திரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி அதாவது நாளை தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளின் ஃபர்ஸ்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்கிறார்கள். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.