விஷாலின் 'எனிமி' டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் படப்பிடிப்பு நிறைவடைந்த தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த விபரத்தை நாளை அறிவிப்பதாக நேற்று இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் ‘எனிமி’ படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். மேலும் அதில் அவர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்துள்ள புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ள இந்த அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் மிருணாளினி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவும், ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.