நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. விஷால் நேரில் ஆஜர்

  • IndiaGlitz, [Friday,December 22 2017]

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சற்றுமுன்னர் நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் ஆஜரானார். நீதிமன்றத்தில் உறுதி அளித்ததற்கு மாறாக தன்னை நடிகர் சங்க பொதுக்குழுவில் இருந்து விஷால் நீக்கியது நீதிமன்ற அவமதிப்பு என்று நடிகர் ராதாரவி தொடர்ந்த வழக்கில் இன்று விஷால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் நடிகர் விஷால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவின்படியே ராதாராவி நீக்கப்பட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் மேலும் ஆஜராக தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று விஷால் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் இனி ஆஜராக தேவையில்லை என்று கூறியதோடு, இந்த வழக்கை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.