தளபதி பிறந்த நாளில் ரிலீஸாகும் புரட்சி தளபதியின் டிரைலர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் புரட்சி தளபதி விஷால் நடித்துள்ள ’சக்ரா’ படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 22 ஆம் தேதியான இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புரட்சி தளபதி விஷால் நடித்து வரும் ’சக்ரா’ படத்தின் முக்கிய அறிவிப்பு இதே ஜூன் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு ’சக்ரா’ படத்தின் டிரெய்லரை வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் பிறந்தநாளில் புரட்சி தளபதியின் ’சக்ரா’ பட டிரைலர் வெளியாக இருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் குஷியாகி உள்ளனர்.
விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready for the “Glimpse of Trailer” of #Chakra today by 5 PM....GB@ReginaCassandra @ShraddhaSrinath @thisisysr @manobalam @srushtiDange @iamrobosankar @AnandanMS15 @johnsoncinepro @balasubramaniem @baraju_SuperHit pic.twitter.com/7Dq1X34dxm
— Vishal Film Factory (@VffVishal) June 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com