ஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ’சக்ரா’, துப்பறிவாளன் 2 ‘ மற்றும் ஆர்யாவுடன் அவர் நடிக்கும் படம் என மூன்று படங்களின் அப்டேட்டுக்கள் ஒரே நாளில் வெளிவந்திருப்பது விஷால் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது
விஷால் நடிப்பில், இளையராஜா இசையில், மிஷ்கின் இயக்கி வந்த திரைப்படம் ’துப்பறிவாளன் 2’. இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இந்த படத்தின் மீதி பகுதியை இயக்க உள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்கான பூஜை சமீபத்தில் நடந்தது
இதே நாளில் விஷாலின் ’சக்ரா’ படத்தின் பின்னணி வேலைக்கான பூஜையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என தெரிகிறது
அதுமட்டுமின்றி ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் ஓப்பனிங் பாடலின் பாடலின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இந்த பாடலுக்கு பிருந்தா நடன இயக்குனர் ஆக பணியாற்றி உள்ளார். தமன் இசையில் தெருக்குரல் அறிவு பாடல் வரிகளில் உருவான பாடல் படப்பிடிப்பு முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
#Vishal30 #Arya32 - The grand opening song sequence?? successfully completed. choreographed by @BrindhaGopal1 ,@MusicThaman musical ??
— Diamond Babu (@idiamondbabu) October 28, 2020
& lyrics by @TherukuralArivu.@arya_offl @anandshank @VishalKOfficial @vinod_offl @MiniStudio_ @mirnaliniravi @RDRajasekar@RIAZtheboss pic.twitter.com/2IgOMNJeBY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments