விஷாலின் 'சக்ரா': சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகிய ‘சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ‘சக்ரா’படத்தின் சென்சார் தகவல் வந்துள்ளது. ‘சக்ரா’படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இது குறித்து விஷால் தனது டுவிட்டரில் ‘சக்ரா’தமிழ் படத்தின் படத்தின் சென்சார் சான்றிதழ் உறுதியாகிவிட்டது. தெலுங்கு சென்சார் விரைவில் நடைபெற உள்ளது. எனவே இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ளார்.
விஷால், ரெஜினா, ஷராதா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
YES, we are Good to Go !!
— Vishal (@VishalKOfficial) February 8, 2021
Tamil version of #Chakra censor is over, Certified U/A, Telugu on the way, Grand release worldwide in all languages on 19th Feb....Damn Excited #ChakraCensoredWithUA#ChakraFromFeb19#ChakraInTheatres pic.twitter.com/QuVf73yPvt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments