என்னைவிட ரொம்ப கேவலமானவனா இருக்கணும்: 'அயோக்யா' டீசர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் 17 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரின் முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை இதுவொரு முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதை உறுதி செய்துள்ளது.
குறிப்பாக பார்த்திபனின் வில்லத்தனம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருக்கும் என கருதப்படுகிறது. 'வர்றவன் நீதி நியாயம்ன்னா ஸ்பெல்லிங் என்னன்னு கேட்கணும், என்னைவிட ரொம்ப கேவலமானவனா இருக்கணும் என்ற வசனத்தில் இருந்தே அவரது கேரக்டரை ஊகிக்க முடிகிறது.
விஷால் மற்ற படத்தை விட இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்காக கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார் என்பது ஆக்சன் காட்சிகளை பார்க்கும்போது தெரிகிறது. அதே நேரத்தில் நடிப்பிலும் சற்று வித்தியாசத்தை காட்டியுள்ளார்.
ராஷிகண்ணாவின் அழகு, சாம் சிஎஸ் பின்னணி இசை, கார்த்திக்கின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் அளிக்கும். மொத்தத்தில் இயக்குனர் வெங்கட்மோகன், விஷாலுக்கு இன்னொரு 'இரும்புத்திரை'யை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com