விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

கடந்த ஆண்டு விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது இரவுபகலாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.