விஷாலின் 33வது படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவான ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’லத்தி' மற்றும் ’துப்பறிவாளன்2’ ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஷாலின் 33வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’எனிமி’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்த வினோத்குமார் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஷாலின் 33வது படத்தின் டைட்டில் ’மார்க் ஆண்டனி’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Here is the Explosive TITLE LOOK of #V33 #MarkAntony??????
— Vishal (@VishalKOfficial) January 1, 2022
A Pan Indian action film, GB@iam_SJSuryah @Adhikravi @vinod_offl Happy new year mamaeey! Shoot commences February 2022??@RIAZtheboss @UrsVamsiShekar @baraju_SuperHit pic.twitter.com/jXgMIxY7AR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout