'நூறாண்டு கால' பாடகியின் துயர் துடைத்த விஷால்

  • IndiaGlitz, [Tuesday,March 29 2016]
நடிகர் சங்க செயலாளர் விஷால் பதவியேற்றதில் இருந்து திரைப்படத்துறையில் பல சாதனைகள் செய்து தற்போது வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்துள்ளோம். பரவை முனியம்மா, கொல்லாங்குடி கருப்பாயி முதல் பல நலிந்த கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும் விஷால் தற்போது மேலும் ஒரு பழம்பெரும் கலைஞருக்கு உதவி செய்துள்ளார்.

சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் பேசும் படம்'. இந்த படத்தில் 'நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க' என்ற பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர்களுடன் இணைந்து பாடிய பாடகி சரளா அம்மா. இவர் தற்போது தனது மகள்களுடன் வறுமையில் வாடி வருவதை பத்திரிகைகள் மூலம் கேள்விப்பட்ட நடிகர் விஷால், அவர்களுக்கு தனது தேவி அறக்கட்டளை மூலமாக மாதந்தோறும் ரூபாய் 5,000 தருவதாகவும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தருவதாகவும் அறிவித்து உள்ளார்.
விஷாலின் உதவியால் தற்போது சரளா அம்மாவும் அவருடைய குடும்பத்தினர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். நலிந்த கலைஞர்களை தேடிப்பிடித்து உதவி செய்யும் விஷால் உண்மையிலேயே நூறாண்டு காலம் வாழ வேண்டியவர்தான்.

More News