மூட்டை தூக்கி கிடைத்த தொகையை கஜா பாதிப்பானவர்களுக்கு கொடுத்த விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலின் பாதிப்பு கணக்கிட முடியாத அளவில் இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலகினர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.
இந்த நிலையில் கஜா புயலில் பாதித்த 14 குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக நடிகர் விஷால் கடலூர் கவிதாலயா தியேட்டரில் திண்பண்டங்கள் விற்பனை செய்தும், அந்தப் பகுதியில் மூட்டைத் தூக்கி அதில் கிடைத்த தொகையையும் கஜா புயலில் பாதித்தவர்களுக்காக அளித்துள்ளார். இந்த சம்பவம் வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் வரவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் இதுவரை வாரம் ஒரு நபருக்கு மட்டுமே உதவி என்ற வரிசையில் நடைபெற்று வந்தது. ஆனால் வரும் வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி செய்யும் அத்தியாயம் வர உள்ளது. நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் பரிதாப நிலை குறித்தும் பேசுகிறார்கள். நடிகர் விஷால் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சமுத்திக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்டு கண்ணீர் வடித்ததோடு,
‘‘கஜா புயல் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களை திண்றுவிட்டது. இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடந்ததைப் போல இப்போதும் பலர் நினைப்பதுதான் வேதனையாக இருக்கிறது!’’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments