தமிழக நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகர்கள் பிரசன்னா, அருள்நிதி உள்பட பலர் உதவி செய்ய முன்வந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும் தற்போது நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். போன் எண்: 97104 44442 என்று விஷால் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout