தமிழக நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகர்கள் பிரசன்னா, அருள்நிதி உள்பட பலர் உதவி செய்ய முன்வந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும் தற்போது நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். போன் எண்: 97104 44442 என்று விஷால் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

More News

மகளின் நீட் தேர்வுக்காக கம்மலை அடகு வைத்த தாய்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த சில தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை

விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஓட்டுக்கு ஐயாயிரம், நீட்டுக்கு ஆயிரமா? நடிகை கஸ்தூரி காட்டம்

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

'காலா' இசை வெளியீடு நடைபெறும் இடம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்